E-Da`wah Committee Directory

Your Way to Understanding Islam

عربي English
ஷவ்வால் மாத ஆறு நோன்பைப் பற்றி..!

ஷவ்வால் மாத ஆறு நோன்பைப் பற்றி..!

2020-05-25T13:24:56

ரமளான் மாதத்தின் கடமையான நோன்புகளைத் தொடர்ந்து வரும் ஷவ்வால் மாதத்தின் முதல் நாளை ஈகைப் பெருநாளாக நாம் கொண்டாடுகிறோம். இதனைத் தொடர்ந்து ஷவ்வால் மாதத்திலும் உபரியாக ஆறு நோன்புகள் நோற்பது நபி பெருமானார் (ஸல்) அவர்கள் காட்டித்தந்த வழிமுறையாகும்.

ஈகைத் திருநாள் வாழ்த்துக்கள்!

ஈகைத் திருநாள் வாழ்த்துக்கள்!

2020-05-23T23:56:03

ஈகைத் திருநாள் வாழ்த்துக்கள்!“இறைவனே பெரியவன்… இறைவனே பெரியவன்… அவனைத் தவிர வணக்கத்திற்கு உரியவன் வேறு யாரும் இல்லை. இறைவனே பெரியவன்.

தவ்பா-பாவ மன்னிப்பு!

தவ்பா-பாவ மன்னிப்பு!

2020-05-23T11:42:21

ஒளிப்பட உரை:அப்துல் ஜப்பார்   தவ்பா-பாவ மன்னிப்பு!   அல்லாஹ்வின் ஏவல் விலக்குகள் வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும் பின்பற்றவேண்டும். பிறந்ததிலிருந்து இன்று வரை நாம் சின்னதும் பெரியதுமாக பெரும் பாவங்களையும் தவறுகளையும் செய்துள்ளோம். இதற்கெல்லாம் இறைவனிடத்தில் நாமெல்லாம் கணக்கு தீர்க்கவேண்டி உள்ளது. மரணமடைவதற்கு முன்னால் கணாக்கு தீர்க்க வேண்டாமா? படைத்த இறைவனிடத்தில் பாவ மன்னிப்பு கேட்க வேண்டாமா? நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பு கேளுங்கள்; அவன் பால் திரும்புங்கள்; என்னைப் பாருங்கள்! நான் […]

நோன்பு காலத்தில் அதிகம் உண்ணாதீர்கள்! வீண்விரயம் செய்யாதீர்கள்..!!

நோன்பு காலத்தில் அதிகம் உண்ணாதீர்கள்! வீண்விரயம் செய்யாதீர்கள்..!!

2020-05-19T12:59:34

Ramazan_Free_Issue(நோன்பு காலத்தில் அதிகம் உண்ணாதீர்கள்! வீண்விரயம் செய்யாதீர்கள்!!) by gifariz

நோன்பு சுயகட்டுப்பாட்டைத் தரும்

நோன்பு சுயகட்டுப்பாட்டைத் தரும்

2020-05-18T10:26:40

நோன்பு சுயகட்டுப்பாட்டைத் தரும்.நோன்பு சுயகட்டுப்பாட்டை வளர்க்கின்றது. ஆசை இருந்தும், தேவை இருந்தும் உணவு மற்றும் பானம் இருந்தும் அவற்றை உண்ணாமல், பருகாமல் மனதைக் கட்டுப்படுத்தி பக்குவப்படுத்துகின்றது நோன்பு! இவ்வாறே கோபத்தைக் கட்டுப்படுத்தி பொறுமையைப் போதிக்கின்றது. நோன்பு நாவையும், தேவையற்ற போக்குகளிலிருந்தும் தவிர்ந்திருக்கச் செய்து அதையும் கட்டுப்படுத்துகின்றது. இவ்வாறு உள்ளத்தையும் உடலையும் கட்டுப்படுத்தி பக்குவமாக வாழ நோன்பு பயிற்சியளிக்கின்றது. இறைத்தூதர்(ச) அவர்கள் கூறினார்கள்: ”நோன்பு (பாவங்களிலிருந்து காக்கின்ற) கேடயமாகும்; எனவே, நோன்பாளி கெட்ட பேச்சுகளைப் பேச வேண்டாம்! முட்டாள்தனமான […]

இறைவா..!

இறைவா..!

2020-05-15T10:30:49

இன்னும் அல்லாஹ்வின் அரு(ட் கொடைக)ளை நீங்கள் கணக்கிட்டால், அவற்றை உங்களால் எண்ண முடியாது! நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாகவும், மிகக் கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.’ (16: 18) ‘நீங்கள் அவனிடம் கேட்ட யாவற்றிலிருந்தும் அவன் உங்களுக்குக் கொடுத்தான்.

இறைநம்பிக்கை எப்படி? குருட்டு நம்பிக்கை அல்ல..!

இறைநம்பிக்கை எப்படி? குருட்டு நம்பிக்கை அல்ல..!

2020-05-14T13:36:38

இறைநம்பிக்கை என்பது ஒவ்வொரு மனிதன் மீதும் அத்தியாவசிய ஒரு அம்சம். படைத்தவனின் நம்பிக்கை கொடுத்து வினா எழுப்பும் அறிவியற்சார் மாந்தர், அந்த பகுத்தறிவு எங்கிருந்து கிடைத்தது என்பது குறித்து சிந்திப்பதில்லை.இதுகுறித்து அறிந்தவர்கள் நேரே தஞ்சம் புகுவது அல்லாஹ்விடத்தில்தான்..!

நோன்பு அல்லாஹ்வுக்குரியது.

நோன்பு அல்லாஹ்வுக்குரியது.

2020-05-13T10:14:16

நோன்பு அல்லாஹ்வுக்குரியது. ரமளான் மாதம் எத்தகையதென்றால், அம்மாதத்தில்தான் மனிதர்களுக்கு (முழுமையான) வழிகாட்டியாகவும், மேலும் நேர்வழியின் தெளிவான அறிவுரைகளைக் கொண்டதும், சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்துக் காட்டக்கூடியதுமான குர்ஆன் இறக்கியருளப்பட்டது. எனவே இனி உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் முழுவதும் நோன்பு நோற்க வேண்டும். ஆனால் எவரேனும் நோயாளியாகவோ, பயணத்திலோ இருந்தால், அவர் மற்ற நாட்களில் கணக்கிட்டு நோன்பு நோற்றிட வேண்டும். அல்லாஹ் உங்களுக்கு இலகுவை விரும்புகின்றான். அவன் உங்களுக்குக் கஷ்டத்தைத் தர விரும்பவில்லை. (நோன்பின்) எண்ணிக்கையை […]

இதுதான் சுவனம்..!

இதுதான் சுவனம்..!

2020-05-12T13:10:42

இதுதான் சுவனம்..! (நபியே!) நாம் உமக்கு ‘கவ்ஸரை’* அருளினோம். எனவே, நீர் உம் இறைவனுக்காகவே தொழுவீராக! பலி (குர்பானி)யும் கொடுப்பீராக! திண்ணமாக உம் பகைவன்தான் வேரறுந்தவன் ஆவான்.

புனித ரமளான் ஐயங்கள்-தெளிவுகள் -5

புனித ரமளான் ஐயங்கள்-தெளிவுகள் -5

2020-05-11T19:18:42

நபி(ச) அவர்கள் தமது ஒரு பயணத்தில் ஒரு மனிதரைச் சூழ மக்கள் ஒன்று கூடியிருந்து அவருக்கு நிழல் கொடுத்துக் கொண்டிருப்பதைக் கண்டு ‘இது என்ன?’ என்று கேட்டார்கள். ‘இவர் ஒரு நோன்பாளி’ என்று கூறிய போது, ‘ஒரு பயணத்தில் நோன்பு நோற்பதில் நன்மையில்லை” என்று கூறினார்கள்.

ரமளான் சிறப்புக்கள்..!

ரமளான் சிறப்புக்கள்..!

2020-05-06T12:44:15

அரபி மாதங்கள் என அழைக்கப்படும் சந்திர மாதங்களில் 9 வது மாதம் ரமளான் மாதமாகும். இந்த ரமளான் மாதத்திற்கென்று சில சிறப்புகள் உள்ளன. ஒவ்வொரு முஸ்லிமும் அம்மாதத்தின் முழுமையான பயனை அடைவதற்காக அதன் சிறப்புகளை அறிந்து கொள்வது அவசியமாகும்.

துஆ-ஓர் இறைவணக்கம்

துஆ-ஓர் இறைவணக்கம்

2020-05-02T14:40:44

துஆ-ஓர் இறைவணக்கம் துஆ ஓர் வணக்கம்: – وَقَالَ رَبُّكُمْ ادْعُونِي أَسْتَجِبْ لَكُمْ إِنَّ الَّذِينَ يَسْتَكْبِرُونَ عَنْ عِبَادَتِي سَيَدْخُلُونَ جَهَنَّمَ دَاخِرِينَ உங்கள் இறைவன் கூறுகிறான்: ‘என்னையே நீங்கள் பிரார்த்தியுங்கள், நான் உங்(கள் பிரார்த்தனை)களுக்குப் பதிலளிக்கிறேன், எவர்கள் என்னை வணங்குவதை விட்டும் பெருமையடித்துக் கொண்டிருக்கிறார்களோ அவர்கள் சிறுமையடைந்தவர்களாக நரகத்தில் நுழைவார்கள்.” (காஃபிர் 40: 60). عَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ قَالَ سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ الدُّعَاءُ هُوَ الْعِبَادَةُ […]

அளவில்லாக் கூலி!

அளவில்லாக் கூலி!

2020-05-02T10:18:13

அளவில்லாக் கூலி!அடுத்து, எல்லா அமல்களுக்கும் அல்லாஹ்தான் கூலி கொடுக்கின்றான். அப்படியிருக்கும் போது நோன்பைப் பற்றி மட்டும் ஏன் ‘நானே அதற்குக் கூலி கொடுக்கின்றேன்” என்று அல்லாஹ் கூறுகின்றான் என்ற சந்தேகமும் எழலாம். எல்லா நல்லறங்களுக்கும் அல்லாஹ்வே கூலி கொடுக்கின்றான். அந்தக் கூலியை எத்தனை மடங்காகப் பெருக்கிக் கொடுக்க வேண்டும் என்ற அளவு உண்டு. ஆனால், நோன்புக்கு அந்த அளவு எல்லை என்பதெல்லாம் கிடையாது. அல்லாஹ்வே அவன் நினைக்கும் அளவு கணக்கின்றி வழங்குகின்றான். அதனால்தான் அதற்கு நானே கூலி […]

படைப்பாளனின் இறுதிவேதம்!

படைப்பாளனின் இறுதிவேதம்!

2020-04-30T17:11:49

படைப்பாளன் நீங்களா? இறைவனா? உங்களைப் படைப்பவன் அல்லாஹ்வே! அகிலங்களின் இறைவனான அல்லாஹ் கூறுகிறான்: – நாமே உங்களைப் படைத்தோம். எனவே, (நாம் கூறுவதை) நீங்கள் உண்மையென்று நம்ப வேண்டாமா? (கர்ப்பப் பையில்) நீங்கள் செலுத்தும் இந்திரியத்தைக் கவனித்தீர்களா? அதை நீங்கள் படைக்கிறீர்களா? அல்லது நாம் படைக்கின்றோமா? உங்களுக்கிடையில் மரணத்தையும் நாமே ஏற்படுத்தியுள்ளோம்; எனவே நம்மை எவரும் மிகைக்க முடியாது. (அன்றியும் உங்களைப் போக்கி விட்டு) உங்கள் போன்றோரை பதிலாகக் கொண்டு வந்து நீங்கள் அறியாத உருவத்தில் உங்களை […]

புனித ரமளானின் உன்னத தாத்பர்யம்..!!

புனித ரமளானின் உன்னத தாத்பர்யம்..!!

2020-04-30T15:23:40

வாழ்வின் ஒவ்வொரு நாழிகையையும் பசுமைப்படுத்தி எம் உள்ளங்களை சலவை செய்து பவித்ரப்படுத்துவது புனிதரமளான் மாதமே எனில் அது மிகையல்ல. தனது குளிர்நிழலை இறைஉவப்புக்காய் நோன்பு பேணும் மாந்தர் மீது தாரை வார்த்து அவர்தம் வாழ்வை இறைமாறிலிருந்து நீக்கி, இறைஉவப்பின்பால் சாயச் செய்யும் உன்னத மாதம் இது!இறைக்கட்டளையை அழகாய்ப் பேணி,மறுமையில் ஏகஇறையிடமிருந்தே நேரடியாக நற்கூலி பெறும் அருட்பேறுக்கான வழிமுறையாக இருக்கும் இம்மாத நோன்பு நம்மை இறைமாறிலிருந்து விலக்கச் செய்யட்டும்.இறையருளை மும்மாரி போல் எம் மீது படரச் செய்யட்டும்! இறைவனுக்கு […]

அண்ணலார் (ஸல்) அழகிய வரலாறு..! – 15

அண்ணலார் (ஸல்) அழகிய வரலாறு..! – 15

2020-04-30T14:03:29

அண்ணலார் (ஸல்) அழகிய வரலாறு..! – 15 உன்னத பணி உவகையான ஆரம்பம் அல்லாஹ்-வின் இந்த வசனங்கள் அருளப்பட்ட பின்னர், அவனை மட்டுமே வணக்கத்துக்குரியவனாகக் கொள்ளும்படி, முதலில் தனது குடும்பத்தாருக்கு அழைப்பு விடுத்தார் அண்ணலார் முஹம்மத் (ஸல்) அவர்கள்.

குர்ஆனின் ஒளியில் நோன்பு 1

குர்ஆனின் ஒளியில் நோன்பு 1

2020-04-28T19:14:11

நோன்பை பற்றி புனித குர்ஆன் என்ன சொல்கிறது. அதன் மூலம் அல்லாஹ் எந்த மாற்றத்தை இறைவிசுவாசிகளிடம் எதிர்பார்க்கிறான். நோன்பை எப்படி பயனுள்ளதாக அமைத்துக் கொள்ளலாம். விளக்கமளிக்கிறார் ஷெய்க உஸ்தாத் மன்ஸூர் அவர்கள். httpv://youtu.be/_VFj1WyUak0  

இறைநம்பிக்கை

இறைநம்பிக்கை

2020-04-27T15:18:33

இஸ்லாம் கல்வி இறைநம்பிக்கை ஈமான் என்றால் என்ன? அதன் தன்மைகள் யாவை?

ரமளான் சிந்தனைகள்

ரமளான் சிந்தனைகள்

2020-04-26T20:19:56

கண்ணியமிக்க ரமலான் மாதத்திலே வல்ல அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை அடைவதற்காக நாம் ஒவ்வொருவரும் நம்மால் ஆன பற்பல நற்கருமங்களைச் செய்ய முயற்சிப்போம். அதிலும் பெரும்பாலோனவர்களின் வாழ்வினில் இந்த நான்கு கடமைகளும் சங்கமித்து அவர்கள் இக்கடமைகளை ஒருசேர நிறைவேற்றுவதற்கு அரிய வாய்ப்பாகவும் இம்மாதம் திகழ்கின்றது.

விருந்தாளியல்ல இந்த மாதம்..!

விருந்தாளியல்ல இந்த மாதம்..!

2020-04-26T12:00:29

இறைநம்பிக்கையாளர்களே! உங்களுக்கு முன் இருந்த (நபிமார்களைப் பின்பற்றிய)வர்கள் மீது கடமையாக்கப்பட்டது போல், உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டிருக்கிறது. (அதன் மூலம்) நீங்கள் இறையச்சமுள்ளவர்களாய்த் திகழக்கூடும்.